2500 ரூபாவை தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தினரிடம் திருப்பி கொடுத்துள்ளனர்

க.கிஷாந்தன்

 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இடைகால கொடுப்பணவாக 2500 ருபா வழங்கும் நடவடிக்கைகள் தற்போது தோட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சில தோட்ட நிர்வாகம் இக்கொடுப்பணவை தொழிலாளர்களுக்கு முறையாக வழங்கவில்லையென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். .

நுவரெலியா நானுஓயா உடரதல்லை தோட்டத்தில் இக்கொடுப்பணவு கடந்த 29 திகதி வழங்கப்பட்டுள்ளது.

இக்கொடுப்பணவை பெறாமல் தோட்ட நிர்வாகத்தினரிடம் திருப்பி கொடுத்துள்ளதாக இத்தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் மாதம் தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு லீவு போனஸ் விடுமுறை வழங்கியுள்ளது இதன் காரனமாக குறைந்த நாட்களே தொழிலாளர்கள் வேலை செய்துள்ளனர்.

வழமையாக விடுமுறை செப்டம்பர் மாத பகுதியில் வழங்குவதாகவும் இம்முறை தோட்ட அதிகாரி முன்கூட்டியே வழங்கியதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இத்தோட்ட தொழிலாளர்கள் ஜூன் மாதம் 05 அல்லது 10 நாட்கள் மாத்திரமே வேலை செய்துள்ளனர் இதனை காரனம் காட்டி தோட்ட நிர்வாகம் இக்கொடுப்பணவை குறைத்து வழங்க முயற்சித்ததாகவும் இதன் காரணமாகவே இடைகால கொடுப்பணவை பெற்றுகொள்ள வில்லையென இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக  தொழிற்சங்க அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தபோதிலும் அவர்கள் எவ்வித நடவடிக்கைகள் எடுக்கவில்லையென தோட்ட தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தமக்கு இக்கொடுப்பணவை முறையாக வழங்குவதற்கு தொழிற்சங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு இத்தோட்ட தொழிலாளர்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.