மார்டின் லூதர்கிங், மாவோ சேதுங் போன்றோர் கூட பாத யாத்திரை சென்றுள்ளதாகவும் எனினும் மனித வரலாற்றில் மிகப் பெரிய பாத யாத்திரை கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையை சீர்குலைக்க அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை கையாண்டது.பாத யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் குறித்து துமிந்த திஸாநாயக்க, மகிந்த அமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோர் பல கதைகளை கூறினர்.
ஒரு யார் தூரத்திற்கு மட்டுமே கூட்டம் இருந்தாக லக்ஷ்மன் கிரியெல்ல கூறியிருந்தார்.
லக்ஷ்மன் கிரியெல்ல தனது ஆலோசர்கள் அலுவலகத்திற்கு வருவதை பார்த்தே இதனை கூறியிருக்கின்றார் என நான் எண்ணுகிறேன்.
பாத யாத்திரை ஆரம்பத்தில் இறுதி வரை இரண்டு மில்லியன் மக்கள் இணைந்திருந்தனர்.
இவர்களில் ஒரு மில்லியன் மக்கள் கொழும்புக்கு வந்தனர்.கண்டியில் இருந்து கொழும்பு வரையுள்ள எந்த மாவட்டத்திலும் கடந்த தேர்தலில் நாம் வெற்றிபெறவில்லை.
இப்படியான நிலைமையில், பெருந்தொகையான மக்கள் பாத யாத்திரையில் கலந்து கொண்டமை பாரிய வெற்றியாகும்.
பாத யாத்திரை குறித்து ஒரு அளவும் அறியாத ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேசி முடித்த திருமணத்திற்கு சென்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொன்னான தலைவர் மகிந்த ராஜபக்ச.
1977 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறித்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் இவர்கள் இணைந்துள்ளனர் எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.