இலங்கையின் சமகால அரசாங்கத்திற்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வரும் கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இறுதி நாள் இன்றாகும்.
இன்றைய தினம் இறுதிக்கூட்டம் இடம்பெறவுள்ளமையினால் அதனை நடத்துவதற்கான மைதானம் இதுவரை கிடைக்கவில்லை.
இதனையடுத்து பாதயாத்திரை களத்திலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அவசரமாக தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவசரமாக மைதானம் ஒன்றை தருமாறு கேட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல அமைச்சர்கள் ஊடாக ஜனாதிபதியிடம் இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் அதற்கான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பிரதமருக்கு அழைப்பை ஏற்படுத்தி மஹிந்த இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.