காபுலில் வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை ஓட்டல் மீது மோதி தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் !

201608011229495126_Taliban-truck-bomb-rocks-hotel-for-foreigners-in-Kabul_SECVPFஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையம் மற்றும் ராணுவ தளம் அருகே வெளிநாடுகளை சேர்ந்த காண்டிராக்டர்கள் தங்கியுள்ள ஓட்டல் மீது இன்று அதிகாலை 1.30 மணியளவில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த ஓட்டலின் வடக்கு பகுதியில் உள்ள ‘கேட்’ மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் நிரப்பிய லாரி மூலம் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டு வெடித்த சப்தன் பல மைல் சுற்றளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், ஓட்டலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளையும் வீசி தாக்கினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இவர்களுடன் போலீசாரும் இணைந்து தீவிரவாதிகளை தாக்கினார்கள். இதனால் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

சுமார் 7 மணி நேரங்கள் நீடித்த துப்பாக்கிச் சண்டைக்கு பின்னர் 3 தீவரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார், 3 பேர் காயம் அடைந்தனர். ஓட்டலில் இருந்த பணியாளர்கள் அல்லது விருந்தினர் யாரும் காயம் அடையவில்லை என்று காபுல் நகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.