ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றுவதற்கு ஊக்கமளிக்கப்படும் என கனடா தெரிவித்துள்ளது.
மெய்யான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என கனேடிய பிரதமர் துரளவin வுசரனநயர தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை கலவரங்கள் தொடர்பிலான தமிழ் மக்களின் நினைவு நிகழ்வுகளில் கனடாவும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
கலவரங்களில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.