ஜனாதிபதிக்கும், கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையே விசேட சந்திப்பு !

meetingகூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்ற நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி இல்லத்திற்கு வருகை தருமாறு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பு பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தாம் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரையை நிறுத்துமாறு ஜனாதிபதி கோர மாட்டார் எனவும் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் பாத யாத்திரை நடத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தேசத் துரோக செயற்பாடுகளை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் ஆரம்பமாகவுள்ள பாத யாத்திரையானது கட்சிக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எதிரானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.