இலங்கை விவகாரத்தில் ஐ. நா. அமைப்பின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை:ஹெலன் கிளார்க்

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணுகுமுறை பற்றிய விமர்சனம் நியாயமானதே என நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் தெரிவித்துள்ளார்.

7299336-3x2-940x627_Fotor

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்காக கிளார்க் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கிளார்க் தற்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத் திட்டத்தின் நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சமாதானத்தையும் பாதுகாப்பபினையும் நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.