மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் எந்தவொரு குழுவிலும் அங்கம் வகிக்கவில்லை என அபிவிருத்தித் தந்திரோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
அர்ஜூன் மகேந்திரன் வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் எந்தவொரு குழுவிலும் நியமிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் கையொப்பமிடவுள்ள எட்கா உடன்படிக்கை, சீனா, சிங்கப்பூருடன் கையொப்பமிடவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை என்பன தொடர்பிலான குழுக்களில் அர்ஜூன் மகேந்திரன் அங்கம் வகிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
அர்ஜூன் மகேந்திரனுக்கு உயர் பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளது.