மு.கா.வின் பண பரிமாற்றங்ளை வெளிக்கொண்டு வருமாறு ஜம்மியத்துல் உலமாவிடம் கோரிக்கை

பலரின் பணங்களில் சந்தாக்களை முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயமான தாறுஸ்ஸலாத்துக்கு செலுத்தி பல பணக்காரர்களின் சொத்துக்களில் இருந்து பெறப்பட்ட பணங்களையும் சரீர உதவிகளையும் பேச்சாற்றல் உள்ள இளைஞர்களைக் கொண்டு உருப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திற்கு மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் தலைவைர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரஃபின் மறைவிக்குப்பின்னர் நடந்த வியாபாரக் கூட்டில் கதி கலங்கி நிற்கின்றோம்.
 

ஆகவே குர்ஆன் ஹதீஸை இதயத்திலும் யாப்பிலும் சுமந்து கொண்டுள்ள கிழக்கு முஸ்லிம் சமூகத்தை விற்று அரசியல் பிழைப்பு நடாத்தும் அரசியல் வாதிகளின் முகத்திரைகளை கிழிக்கவே கிழக்கின் எழுச்சி உருப்பெற்றுள்ளது.

 
பின்வரும் காரணங்களுக்காக அவர்களை விசாரணை செய்து உண்மைத் தன்மையினை மக்களுக்கு வெளிப்படுத்தி,  அரசியல் வியாபாரத்தில் ஈட்டிக் கொண்ட வருமானங்கள் அல்லது பணங்கள் இருக்குமானால், அவற்றை மக்களிடமோ அல்லது பள்ளிவாசல்களுக்கோ பங்கிடச் செய்ய முனைப்புக்காட்ட வேண்டும், என ஜம்மியத்துல் உலமா சபையிடம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.


01. 2001ம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் அரசினை வீழ்த்தவென ஜக்கிய தேசிய முன்னணியிடம் வாங்கியதாக கூறப்படும் பணங்களும் கார்களும் பற்றிய குற்றச்சாட்டுகள்.
 
02. 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் செலவுக்கென ஜக்கிய தேசிய முன்னணியிடம் வாங்கியதாக கூறப்படும் பணம் பற்றிய குற்றச்சாட்டுகள்.
 
03. 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவோடு முஸ்லிம்காங்கிரஸின் அங்கத்துவம் பெறாத ஹீசையின் பைலாவுக்கு தலைவரின் தனிப்பட்ட முடிவில் கொடுக்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவிக்கு வாங்கியதாக கூறப்படும் பணம் பற்றிய குற்றச்சாட்டுகள்.
 
04.தமீழிழ வீடுதலைப் புலிகளின் பேச்சு வார்த்தை காலப்பகுதியில் நோர்வே அரசிடம் பெற்றக்கொண்டதாக கூறப்படும் பணம் பற்றிய குற்றச்சாட்டுகள்.
 
05. 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அவர்களை வெல்ல வைக்க என வாங்கிக் கொண்டதாக கூறப்படும் பணம் பற்றிய குற்றச்சாட்டுகள்.
 
06. 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மார்ஷல் சரத் பொன்சேகாவை வெல்ல வைக்க என வாங்கிக் கொண்டதாக கூறப்படும் பணம் பற்றிய குற்றச்சாட்டுகள்.
 
07. சிறு பான்மை சமூகங்களின் முதுகில் குத்திவிடும் 18வது திருத்த சட்டத்திற்கு வாக்களிக்கவென பெற்றுக்கொண்டதாக கூறப்படும் கோடிகள் பற்றிய குற்றச்சாட்டுகள்.
 
08. தற்போது நடைபெற்றும் கொண்டிருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்த விடயங்களில் பணம் பெற்றுக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இணைத்து விடுவதற்காக தமிழ்த்தரப்புடன் கூட்டு சேர்ந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்.
 
இவை பகிரங்கப் படுத்தப் படும் போது கிழக்கின் எழுச்சியின் உருவாக்கத்தின் காலத்தேவையை அனைவரும் உணர்ந்து கொள்வர்.