தம்பதெனிய, மும்மன்ன முஸ்லிம் மாகாவித்தியாலய மைதான காணி விவகாரம், அமைச்சர் ரிஷாட்டின் அதிரடி நடவடிக்கையால் நிரந்தரத் தீர்வு -குருநாகல் மக்கள் நன்றி தெரிவிப்பு

-எம் என் எம் பர்விஸ்

குருனாகல், தம்பதெனியா பிரதேச சபைக்குற்பட்ட மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலய மைதானக் காணி தொடர்பான பிரச்சினை ஒன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அதிரடி நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

IMG-20160719-WA0002_Fotor

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மும்மன்ன முஸ்லிம் பாடசாலை மைதானத்திற்கென 1972 ஆம் ஆண்டு பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவரால்  ஒரு ஏக்கருக்குக்கும் சற்று அதிகமான காணித்தொண்டொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போது இந்தக் காணிக்கான உரித்துரிமைப் பத்திரங்கள், ஆவணங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

இந்த விடயத்தை அறிந்த ஒரு சில இனவாதிகள், கடந்த புதுவருட விளையாட்டுக்களை நிகழ்த்துவது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டிருந்தனர். மேலும் உரிய ஆவணங்கள் அற்ற இந்தக் காணியைக் கைப்பற்றி பொது மைதானமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். ஒரு சில இனவாத சக்திகளும் பெரும்பான்மை இனத்தவர்களும் இதன் பிண்ணணியில் செயற்பட்டிருந்தனர்.

மேலும் இந்தக் காணிப்பிரச்சினை பூதாகரமாகி முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கொள்வனவு, வர்த்தக நடவடிக்கைகளில் பகிஷ்கரிப்பிலும் பெரும்பான்மையினர் ஈடுபட்டிருந்தனர். இதனால் அங்கு வசிக்கும் அப்பாவி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். இந்த பிரச்சினையின் பின்னனியில் முக்கிய இனவாத சக்தியொன்றும் இயங்கி வந்தது.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் சுஹைப் தலைமையில் பாடசாலை நிர்வாகத்தினர், பாழைய மாணவர் மற்றும் பெற்றோர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க தயங்கியதை அடுத்து இந்த விவகாரம்,  அமைச்சரின் குருநாகல் மாவட்ட இணைப்புச் செயலாளர் அஸாருதீன் மொய்னுதீன் ஊடாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் தெரியப்படுத்தப்பட்டது.

விரைந்து செயற்பட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒரு வாரத்திற்குள் இணைப்புச்செயலாளர் அஸார்தீன் மொய்னுதீன் தலைமையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி அந்த மைதானத்தின் உரித்துரிமை தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் பெற்றுக்கொடுத்துள்ளார். 

அனைத்து தரப்பினரும் கைவிட்ட நிலையில் இந்தப்பிரச்சினைக்கு உடனடி, மற்றும் நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுத்த அமைச்சருக்கும் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் அஸார்தீன் மொய்னுதீனுக்கும் மும்மன்ன பாடசாலை அதிபர் சுஹைப், பாடசாலை நிர்வாகத்தினர், பழைய மாணவர்கள், அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.