தேயிலை மலைகளில் குளவி கொட்டுகளில் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்கள் அவ்வாறான சந்தரப்பங்களில் தன்னை பாதுகாத்தல் மற்றும் குளவிக்கூடுகளை கலைத்தல் போன்ற விழிப்புணர்வு பயிற்சி திட்டம் மஸ்கெலியா பிரவூண்ஸ்வீக் தோட்டத்தில் 17.06.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பேராதெனிய பூச்சிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மேற்படி பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மலையகம் தழுவீய ரீதியில் மேற்படி பயிற்சிகள் நடத்தவுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன விருத்திக்கு பயன்படும் தேன் பூச்சியினத்தை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பயிற்சி திட்டத்தில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.