வெலிக்கடை சிறைச்சாலை உச்ச நீதிமன்றிற்கு அருகாமையில் மாற்றம்!

வெலிக்கடை சிறைச்சாலையின் ஒரு பகுதியான விளக்கமறியல் சிறைச்சாலையை வேறொரு இடத்தில்அமைப்பதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

635740391618225482-jail-bars-prison-bars-

மேலும் இலங்கையில் உள்ள பெரும்பாலான சிறைச்சாலைகள் நகரங்களின் மத்தியில்காணப்படுவதால் குறித்த இடமானது பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாககாணப்படுவதாக அரசு குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளை புனரமைப்பு செய்யும்வேலைத்திட்டத்தின் கீழ் வெலிக்கடை சிறைச்சாலையின் ஒரு பகுதியை வேறொருஇடத்திற்கு மாற்றுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் வெலிக்கடை சிறைச்சாலையின் நான்காம் இலக்க பகுதியை நீதிமன்றிற்கு அருகில் காணப்படும் பீ.சீ.சீ.லங்கா நிறுவனத்தின் இடத்தில் அமைப்பதற்குஎதிர்பார்த்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நடவடிக்கைக்காக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கஅமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.