இலங்கை இன்று சுடுகாடாக மாறிவருவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் ஜெனிவா நகரில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்தரமுல்லயில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சம்மேளனத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது பெரிய வாக்குறுதிகளை வழங்கியது. அரசியலமைப்பு திருத்தம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது.
ஆனால், பாராளுமன்ற தேர்தல் முறையிலான அரசியலமைப்பை ஓரமாக வைத்துவிட்டு கொடி, தேசிய கீதம், அரச மதம் என்பவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள தயாராவதாகவும் பசில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியல் பழிவாங்கள் மற்றும் வெவ்வேறு வகையிலான அடக்குமுறைகளையும் அரசு ஏற்படுத்தி வருவதாக அவர் விலயுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே, நாடு இன்று சுடுகாடாக மாறிவருவதாக பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.