திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூஃப் பிரதி அமைச்சர் அமீர் அலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைய உள்ளதாகவும், அது சம்பந்தமான முஸ்தீபுகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் மேற்கொண்டு வருவதாக கடந்த சில நாட்களாக முகநூல் பக்கங்களில் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்கிற்கும் அப்துல்லா மஹ்ரூஃபும் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தினை ஆதாரமாக வைத்து செய்திகள் பதிவேற்றப்பட்டுள்ளதுன் அது பிரபல்யமாக பேசப்படும் விடயமாக மாறியிருக்கின்றது.
இது சம்பந்தமான உண்மை நிலையினை அறிந்துகொள்ளும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூஃபுடன் தொடர்பினை ஏற்படுத்தி வினவிய பொழுது ,
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகற்போசன விருந்துபசாரத்தின் பொழுது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் செல்பி எடுத்து அவருடைய முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த செல்பியினை முகபுத்தக கணக்குகளை வைத்திருக்கும் சிலர் தங்களது முகபக்கத்தில் அப்துல்லா மஹ்ரூஃப் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணையப்போவதாகவும் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் அதற்கான முஸ்தீபுகளை மேற்கொள்வதாகவும் செய்திகளை பதிவேற்றம் செய்து வங்குரோத்து அரசியலினை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தினை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூஃப்… தான் எப்பொழுதும் கட்சியின் தவிசாளரான பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும், கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாட் பதுர்டீனுக்கும் விசுவாசமக இருந்து வருவதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வளர்ச்சியில் தான் முக்கிய பங்காற்றி வருவதாகவும் தெரிவித்தார். அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரசானது அண்மைக்காலம் தொட்டு அகில இலங்கை ரீதியாக வளர்ச்சி அடைந்து வருவதினால் காற்புணர்சி கொண்ட இவ்வாறான சிலர் இப்படியான வங்குரோத்து அரசியலினை மேற்கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்குள் பிளவினை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
குறித்த விடயம் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூஃப் தொலைபேசியின் ஊடக தெரிவித்த கருத்துக்களின் காணொலி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாத்