நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் வடக்கில் சுகாதார தொண்டு ஊழியர்களாக இணைத்து கொள்ளப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலையிட்டு 128 சுகாதார தொண்டு ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
வடக்கில் போர் நடைபெற்ற காலத்தில் 200 பேர் சுகாதார தொண்டு ஊழியர்களாக இணைத்து கொள்ளப்பட்டனர்.
தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனடிப்படையில் 128 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.