இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கோப் குழுவில் குற்றவாளியாக இனங்கண்டு, தண்டனை பெற்றுக்கொடுத்தால், கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடலாம் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கோப் அறிக்கையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட எவருக்கும் இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை.
இதனால், அர்ஜூன் மகேந்திரன் கோப் அறிக்கையில் குற்றவாளியாக இனங்காணப்பட்டாலும் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று நினைக்கவில்லை.
கோப் குழு, பொது கணக்கு குழு ஆகியவற்றின் அறிக்கையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட தண்டனை வழங்கப்பட்ட சந்தர்ப்பம் உலக நாடாளுமன்ற வரலாற்றிலும் இல்லை.
கோப் குழு பரிந்துரை அறிக்கையை மாத்திரமே வழங்கும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.