எப்பாவெல போஸ்பேட் அரச நிறுவன தீ தொடர்பாக பல பிரிவுகளில் விசாரணை

எப்பாவெல போஸ்பேட் அரச நிறுவனத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகளானது எப்பாவெல பொலிஸார், குற்ற விசாரணை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நாய்களைக் கொண்ட விசாரணைப் பிரிவு என்பன குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தீயினால் கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, அத்துடன் அங்கிருந்த முக்கியமான ஆவணங்கள், கோப்புக்கள், கணிணி உள்ளிட்ட உபகரணங்களும் அழிவடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த தீப்பரவல் காரணமாக 60 இலட்சத்துக்கும் அதிகமாக இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போஸ்போட் நிறுவனத்தின் தலைவர் உபாலி அநுராத திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இதுவரை குறித்த தீயிற்கான காரணங்கள் வெளியாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் இந்த தீயினால் பெருமளவு ஆவணங்கள் எரிந்துள்ள போதும் அவற்றுள் முக்கியமான ஆவணங்களின் நகல்கள் கொழும்பிலுள்ள பிரதான அலுவலகத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சேதமடைந்த அலுவலகத்தை புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்கு இரண்டு மாத காலங்கள் வரை தேவைப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் உபாலி அநுராத திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.