அஷ்ரபின் பாசறையில் வளர்ந்த போராளிகளின் தலையில் கத்தியை வைத்துள்ள ஹக்கீம்

alif sabry hasan

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்பு குர்ஆன் ஹதீஸ் வழியில் கட்சி கட்டுமானம், ஒழுக்க நெறி, மஷூரா , கோட்பாடு, உட்கட்சி ஜனநாயகம் போன்ற முக்கிய விடயங்கள் உள்வாங்கப்பட்டு தலைவர் வீர தியாகி அஷ்ரபின்  ஆழுமையினால் அபிவிருத்தி அரசியல் தூக்கி எறியப்பட்டு சொல்லிலும் செயலிலும் நடைமுறைப்படுத்தப் பட்டதனால் உணர்வுடன் கட்சிக்குள் நாடு பூராவும் மக்கள் உள்வாங்கப்பட்டனர். அன்று எமது இலக்கும் பாதையும் தெளிவாக இருந்ததனால் கட்சி மக்கள் மயப்படுத்தப்பட்டது.

 

எமது கட்சியின் யாப்பு தலைவர் அப்துர் ரவூப்  ஹக்கீமின் 98 வீத நம்பிக்கையற்ற உயர்பீட உறுப்பினர்களுக்கோ, யாப்பு குழு தலைவருக்கோ, தலைவர் வீர தியாகி அஷ்ரபின் பாசறையில் வளராத போராளிகழுக்கோ தெரியாது. யாப்பு மாற்றத்தின் இறுதிக்கட்டம் தலைவர் அப்துர்  ரவூப்  ஹக்கீமினால் மிகச்சிறப்பாக கண்டி பேராளர் மகாநாட்டில் தனது நிகழ்சி நிரலுக்கு ஏற்ப தனது சட்ட வியாக்கியானங்கழுக்கு அமைய மனு நீதிக்குப் புறம்பான முறையில் சேதாரம் இல்லாமல் சரியான நேரத்தில் பிழையான முடிவாக நிறைவேற்றப்பட்டது.

 

உயர் பீடத்திலோ, கட்டாய உயர் பீடத்திலோ, பேராளர் மாநாட்டிலோ எடுக்கப்படாத தீர்மானங்களை மிக சூட்சமமான முறையில் எழுதி தேர்தல் ஆனையாளருக்கு தனது கையப்பத்துடன் நிந்தவூர் சமாதான நீதவானின் ஒப்புதலுடன் அனுப்பியுள்ளார். இம்மாற்றத்தின் மூலம் தானே ராசா தானே மந்திரியாகி மாபெரும் மக்கள் இயக்கத்தின் உயர்பீட உறுப்பினர்களை செல்லா காசாக மாற்றி அவர்களின் கண்ணைக்கட்டி குழியில் போட்டு தலைவர் வீர தியாகி அஷ்ரபின்  பாசறையில் வளர்ந்த போராளிகளின் தலையில் கத்தியை வைத்தள்ளார்.

 

தலைவர் அப்துர் ரவூப்  ஹக்கீமினால் மஷூரா  இல்லாமல் மாபெரும் மக்கள் இயக்கத்தின் மாற்றப்பட்ட யாப்பு நீதிமன்றம் நாடாமல் மக்களின் மனு நீதிக்காக தேர்தல் ஆனையாளரிடம் உள்ளது. இவை தொடர்பான ஆவணங்கள் உரிய அனுமதி கிடைத்ததும் உங்கள் கைக்கு வந்து சேரும்.

 

மசூறா சபை, உலமா சபை தூக்கி எறியப்பட்டு எமது இலக்கு மறைக்கப்பட்டு எமது பாதை மாற்றப்பட்டு விட்டது. தற்பொழுது எமது கட்சியும் அ.இ.ம.கா., தே.கா., இ.தொ.கா., கட்சிகளின் யாப்புக்கு சமனான யாப்பாக மாறிவிட்டது. இதன் விளைவு தனித்துவம் இழந்து, பேரின வாத கட்சிகளின் கொள்கைக்குள் இம்மாபெரும் இயக்கமும் சங்கமித்துவிட்டது.

 

வரலாற்றில் முதல் முறையாக எவ்வித தேர்தல் ஒப்பந்தமும் இன்றி ஐ.தே.க. உடன் தேர்தல் கேட்டு வரலாற்று துரோகத்தை தலைவர்  ஹக்கீம் எம் பேரியக்கத்துக்கு செய்துள்ளார். இதற்கான முழு பொறுப்பும் பேரியக்கத்தின் உயர்பீட உறுப்பினர்களையே சாரும். 1989 ம் அண்டு தலைவர் வீர தியாகி அஷ்ரபின்  உரையில் அப்போதைய ஐ.தே.க. முஸ்லிம் அமைச்சர்களைப் பார்த்து பேரினவாதிகளின் கிளிப்பிள்ளை என்ற வார்தை இன்று எம் பேரியக்கத்தின் உயர்பீட உறுப்பினர்கழுக்கும் மக்கள் பிரதிநிதிகழுக்குமே உபதேசிக்க வேண்டியுள்ளது.

 

தலைமத்துவ தடுமாற்றம் பாலமுனை மகாநாடு முதல் தற்போதைய ஒன்று கூடல் வரையான காலப்பகுதியில் தனது உரை நடைமுறையில் தலைமத்துவத்துக்கும் வயதுக்கும் ஏற்ற பக்குவமின்மையின் மூலமாக வெளிப்படுகின்றது.

 

எம் பேரியக்கத்தை வளர்க்க நோன்பு நோற்று தியாகம் செய்து ஒதுக்கப்பட்டு ஓரத்தில் கிடக்கும் போராளிகளே தூக்கத்தில் இருந்து எமும்புங்கள். மறைக்கப்பட்ட எமது இலக்கை அடைய, மாற்றப்பட்ட எமது பாதையை நிவர்தி செய்ய, உரிமை அரசியலை நிலைநாட்டி, எமது பேரியக்கத்தின் யாப்பை பாதுகாத்து தலைவர் வீர தியாகி அஷ்ரபின் சிந்தனைகளை மக்கள் மயப்படுத்தி எம் தனித்துவத்தை காக்க எம்முடன் அனிதிரழுங்கள்.

 

பனிச்சவட்டானிலிருந்து
உரிமையுள்ள போராளி
ஏச். ஏ. அலிஃப் சப்றி
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ்