அரசாங்கம் செலுத்தும் கடன் தொகையில் 80 வீதமானவை மஹிந்தவின் ஆட்சியில் பெற்றவை

தற்போதைய அரசாங்கம் செலுத்தும் கடன் தொகையில் 80 வீதமானவை மஹிந்தவின் ஆட்சியில் பெற்றவை என அமைச்சர் கபீர் ஹாஸீம் தெரிவித்துள்ளார்.

அன்றைய ஆட்சியில் அபிவிருத்தி செய்யப்படவில்லை மாறாக கண்காட்சியே நடாத்தப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கமானது அனைத்தையும் வெளிப்படையாகவே செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 சிறிகொத்தா கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வற் வரி அதிகரித்துள்ளதை ஏற்றுக்கொள்வதாகவும், இதன்காரணமாக உயர் வருமானம் பெறும் வர்த்தகர்கள் மீது வரி சுமை திணிக்கப்பட்டுள்ளதோடு சாதாரண மக்களின் வரிச் சுமை குறைவடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய வங்கியின் ஆளுநர் பிரதமரின் நண்பர் என்பதோடு,அவர் அனுபவம் வாய்ந்த அதிகாரி என்றும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.