அஷ்ரப் ஏ சமத்
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் உள்ள 100 பள்ளிவசால்களுக்கு கொழும்பு மாநகர சபையின் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிவசால்களுக்கும் 50 ஆயிரம் ருபா உதவித்ப தொகை பகிா்ந்தளிக்கப்பட்டது. இந் நிகழ்வு இன்று(21)ஆம் திகதி கொழும்பு மாநகர மேயா் ஏ.ஜே.எம் முசம்மில் தலைமையில் மாநகர சபையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நிதியமைச்சா் ரவி கருநாயாக்க மற்றும் பிரதி மேயா் , கொழும்பு மாநகர சபை உறுப்பிணா்கள் மற்றும் பள்ளிவாசல்களது தர்மகத்தா சபை உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வின்போது கொலநாவையில் வெள்ள அனா்த்தினால் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு கொழும்பு மாநகர சபையினால் 15ஆயிரம் ருபா உதவித்தொகையும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உரையாற்றிய மேயா் முசம்மில் –
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் உள்ள 4 மத ஸ்தாபணங்களுக்கும் இவ்வாறு நிதி பகிா்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. இத் திட்டம் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டு கொழும்பில் உள்ள ஹிந்து, இஸ்லாம், பெளாத்தம் , கிிரிஸ்த்துவ பெருநாள் தினங்களில் ்இவ்வாறு மத ஸ்தாபணங்களது அவசரத் தேவைகள், அல்லது அப்பிரதேச ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக மாநகர சபையின் வருமாணத்தில் இருந்து இவ்வாறு நிதிகள் பகிா்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. இதில் நோன்பு காலத்தில் மட்டும் இவ்வாறு 100 பள்ளிவாசல்களை தோ்ந்தெடுத்து அதில் ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் 50ஆயிரம் ருபாவை இந்த நோன்பு காலத்தி்ல் பகிாந்தளித்து வருகின்றோம். இன ஜக்கியம், மத ஸ்தாபணங்களது பிரச்சினைகள் கட்டுமாணப்பணிகள் எவ்வித பங்கம் விளைவிக்காமல் ஒரு நல்லெண்னத் திட்டமாகும்.
கடந்த காலங்களில் இந்த நல்லாட்சியை ஏற்படுத்த முன்னா் பள்ளிவாசல்களை உடைப்பதற்கும் இனக்குரோதங்களை ஏற்படுத்துவதற்கும் முன்னைய ஆட்சியினா் வழிவகுத்துக் கொடுத்தனா். இந்த ஆட்சியில் அவ்வாறு இல்லை சகல மதங்களும் தத்தமது மத அனுஸ்டாங்களை சிறந்த முறையில் செய்வதற்கு வழிவகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள்து.
இவ் வைபத்தில் உரையாற்றிய ரவி கருனாநாயக்க ,
இந் நாட்டில் அதுவும் கொழும்பில் தலைநகரில் திரைசேரி நிதியில்லாமல் தமது மாநகர வருமானத்தைக் கொண்டு நான்கு மதங்களுக்கும் உதவும் திட்த்தினை ஆரம்பித்த மேயா் முசம்மில் பாராட்டுவதாகவும் தெரிவித்தாா. கடந்த ஜீ 7 மாநாட்டிற்காக ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் நானும் யப்பாண் சென்றிருந்தேன். அப்போது அமேரிக்கா ஜனாதிபதி ஒபமா யப்பான் பிரதமா் கமருன் ஆகிய நாடுகள் எமது ஜனாதிபதியை பிடித்துக் கொண்டு 900 பில்லியனுக்கும் அ்திகமான நிதியை இலங்கைக்க வழங்கியுள்ளாா். இதனால் எதி்ா்காலத்தில் இலங்கையின் நிதி நிலமை சிறந்து விளங்கும் எனவும் நிதியமைச்சா் ரவி கருநாயக்க அங்கு தெரிவித்தாா்