துரையப்பா விளையாட்டரங்கை பொதுமக்களுக்கு அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி : பிரதமர் மோடி

 

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவும் இன்று (சனிக்கிழமை) கூட்டாக சேர்ந்து இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தனர். அதன் போது  நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் இந்த விளையாட்டு அரங்கு அர்ப்பணிப்பு விழாவில் பங்கேற்றார்.

அதன் போது வீடியோ காணொளி மூலம் புது டெல்லியில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போதே தமிழ் மற்றும் சிங்கள மொழியில் வணக்கம் சொல்லி தனது உரையை ஆங்கில  மொழியில் நிகழ்த்தினார். 

துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பதிலும் , நான் மகிழ்ச்சி அடைக்கிறேன். என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
 
இந்திய புதுடெல்லியில் இருந்து வீடியோ காணொளி மூலம் யாழில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான் யாழ்ப்பாணம் வந்திருந்த போது யாழ்ப்பான மக்கள் காட்டிய அன்பினையும் ஆதரவையும் நினைத்து பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கின்றது. உண்மையில் அந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். 

 
ஏனெனில் இந்திய நாட்டின் பிரதமர் ஒருவர் முதல் தடவையாக யாழ்ப்பணத்திற்கு விஜயம் செய்த நாள் அன்றைய நாளாகும். மீண்டும் இன்றைய தினம் யாழ். மக்களோடும் இலங்கை மக்களோடும் இணைந்து நல்லுறவு கிடைத்தமைக்கு சந்தோசம் அடைகிறேன். 
 
துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பதிலும் , நான் மகிழ்ச்சி அடைக்கிறேன். என தெரிவித்தார்.