யாழ்.மாநகர சபை முன்னாள் மேஜர் அல்பிரேட் துரையப்பா கொலை செய்யப்பட்டமை ஜனநாயகத்திற்கு எதிரான சம்பவம் என ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனா தெரிவித்து உள்ளார். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை இன்று சனிக்கிழமை காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
இலங்கை இந்திய நட்புறவு நீண்டகாலமான உறவாகும். இன்று இந்த முக்கியமான நிகழ்வு இடம்பெறுகின்றது அதே போல நாளைய தினம் நடைபெறவுள்ள பொசன் நிகழ்வுகள் பௌத்த மக்களுக்கு முக்கியானான நிகழ்வு. அது கூட எமக்கு இந்தியா மூலம் தான் பௌத்த பௌத்த தத்துவமா கிடைத்தது. எமது நாட்டின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவிகளை செய்துள்ளது.
இந்த நாட்டிலே நீண்ட கால யுத்தம் நிலவி யுத்தத்தின் பின்னர் சமாதானம் ஏற்பட்ட பின்னர். பல அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்தியா உதவி வருகின்றது.
இலங்கை இந்திய நட்புறவு காரணமாக எமது பொருளாதாரம் உட்பட பல விடயங்களில் எமது இறுக்கம் மேம்பட்டு வருகின்றது. அதற்காக நாங்கள் சிறப்பாக பணி புரிகின்றோம்.
இரண்டு நாடுகளின் முன்னேற்றத்திற்காக தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதற்கு சில கடும் போக்கு வாதிகள் எதிர்க்கருத்தை தெரிவித்தாலும் நாம் தொடர்ந்து எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த விளையாட்டரங்கானது தேசிய நல்லிணக்கத்திற்கு முக்கிய இடமாக உள்ளது. இன மத குல பேதமின்றி எல்லோரும் ஒன்றிணைய கூடிய முக்கிய இடமாக தான் இந்த விளையாடரங்கு அமைந்துள்ளது.
எனவே இந்த துரையப்பா விளையாட்டரங்கினை திருத்தி அமைத்துள்ளோம் இது கூட எமது நல்லிணக்கத்திற்கு முக்கியமானது. அன்று துரையப்பாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை சம்பவம் ஜனநாயகத்திற்கு எதிரான சம்பவம்.என்பதனை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
இந்திய அரசாங்கத்தின் அனுசுரனையுடன் இந்த துரையப்பா விளையாட்டரங்கை திருத்தி அமைத்து தந்தமைக்காக நான் இலங்கை நாட்டின் சார்பிலே இலங்கை மக்களின் சார்பிலே இந்திய நாட்டுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று இந்த துரையப்பா விளையாட்டரங்கில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் யோகா பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.
எனவே இந்த நிகழ்வுக்கு முழுமையான அனுசரணை வழங்கிய இந்த அரசாங்கத்திற்கும் அதேபோலே இங்கே இந்த நிகழ்வை நடாத்த உதவிய எமது நாட்டு நிறுவனங்கள் , அரச தலைவர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.