உதய கம்மன்பில எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில்

பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்ட பிவித்துரு ஹெலஉறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நுகேகொட பாகொட வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று காலை கம்மன்பில கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான்இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

போலி ஆவணங்களின் ஊடாக அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்தசம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே கம்மன்பில விசேட விசாரணைப்பிரிவில்முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது