எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் புதிய கூட்டணியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த புதிய கூட்டணியின் பல அரசியல் கட்சிகள் இணைந்து கொள்ள உள்ளதுடன் கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைவராக இருப்பார் என கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் சென்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள அவர்கள், புதிய அரசியல் கூட்டணி கட்டாயம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட உள்ள கூட்டணியின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமது கூட்டணி அந்த தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
புதிய கூட்டணியில் சேர அரசியல் கட்சிகள் மாத்திரமல்லாது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் புதியவர்கள் பலர் விருபபம் தெரிவித்துள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.