தேயிலை, இறப்பர், தென்னை போன்ற 08 இலட்சம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உர மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு ஹெக்ரெயருக்கு குறைந்த நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் தேயிலை, இறப்பர், தென்னை தொழிலாளர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும் என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
அதன்படி 08 இலட்சம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் ஒரு வருட காலத்திற்கு உர மானியம் வழங்கப்பட உள்ளது.
இந்நடவடிக்கையை ஆரம்பித்து வைக்கும் விதமாக, காலி மாவட்டத்தில் சிறிய நிலப்பரப்பை உடைய 600 பேருக்கு எதிர்வரும் 12ம் திகதி மானியம் வழங்கப்பட உள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.