சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதனால் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
அவர்களின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். அவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை பழிவாங்க துடிக்கின்றனர்.
அதற்காக கொலைப்பட்டியலை தாயரித்துள்ளனர். அதில் அமெரிக்கர்கள் உள்ளிட்ட 8,318 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அவர்களில் 7,848 பேர் அமெரிக்கர்கள், 312 பேர் கனடாவை சேர்ந்தவர்கள். 39 பேர் இங்கிலாந்துகாரர்கள். மற்றும் 69 பேர் ஆஸ்திரேலியர்கள்.
இவர்கள் தவிர பெல்ஜியம், பிரேசில், சீனா, எஸ்போனியா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், கவுதமலா, இந்தோனேசியா, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜமைகா, நியூசிலாந்து, ரினிடாட் அன் டொபாகோ, தென்கொரியா, சுவீடன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களது தனியான கொலைப்பட்டியலில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கொலைப் பட்டியலில் இருப்பவர்களின் பெயர், நாடு உள்ளிட்டவை முழு விலாசத்துடன் இடம் பெற்றுள்ளது.
பட்டியலில் இடம் பெற்றவர்கள் பெரும்பாலானோர் ராணுவ அதிகாரிகள், அரசு ஊழியர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் அடங்குவர்.
இப்பட்டியல் ‘வொகேடிவ்’ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் அரபிக் மொழியில் பட்டியல் உள்ளது. முதல் கட்டமாக 8318 பேர் பட்டியலை மட்டுமே இந்த இணைய தளம் வெளியிட்டுள்ளது. மற்றவர்கள் பெயர் பட்டியல் குறித்த தகவல் தர மறுத்து விட்டது.