காலியில் நடைபெற்ற மே தின கூட்டமானது வெற்றியளித்தாக கடற்தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த மே தின கூட்டத்திற்கு மலையக மற்றும் வடகிழக்கு கட்சிகளும் வருகை தந்து தமது ஆதரவை வழங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற மே தின கூட்டங்களை விட இந்த வருடம் நடைபெற்ற மே தின கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்ததாக அமைச்சர் கூறினார்.
அத்துடன், இவ்வாறு மக்களின் ஆதரவு முழுமையாக கிடைத்தமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறந்த உறுப்பினர்களான நாமே காரணமென அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சிலர் பல போலியான அறிக்கைகளை தயாரித்து தாம் மே தின கூட்டத்தில் வெற்றி பெற போவதாக கூறி அவற்றை வெளியிட்டதாக அமைச்சர் கூறினார்.
ஆனால் அவை அனைத்துமே வெற்றி அளிக்காத அறிக்கைகளாக மாறியமை தான் அவற்றின் விசேட அம்சம் என கடற்தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, மே தின கூட்டத்தில் பூரண ஆதரவை வழங்கிய பொது மக்களுக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.