படகு ஒன்றில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர்

(ஆவணப்படம்)

 

(ஆவணப்படம்)
                                                             (ஆவணப்படம்)

 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை இந்த படகு சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை காலையில் இலங்கையர்களைக் கொண்ட படகு கொகோஸ் தீவுகளை அடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்  என்பது குறிப்பிடத்தக்கது.

10 முதல் 11 மீற்றர் நீளமான மரத்திலான படகு ஒன்றில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

12 பேர் இந்தப் படகில் பயணித்துள்ளதாக படகை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கமோ அல்லது எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரோ இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தப் படகுப் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனரா அல்லது கைது செய்யப்பட்டனரா என்பது பற்றிய சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.