தன் அல் அமீன் சல்மானின் கதை கேட்டு ஊடகத்திற்கு விடுத்த அச்சுறுத்தல் இன்று நாறிப்பிணம் எடுத்திருக்கிறது, இது தான் தேசியத்லைவரின் சாணாக்கியத்தின் வெளிப்பாடு.
பெரும் புத்திசாலிகள் பிழைவிட்டால் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் ஆனால் இந்த ஆனைக்கு அடியே இல்லை என்பது சல்மான்ளால் வெளிப்பட்டுத்தப் பட்டுக்கொண்டிருக்கிண்றது.
எந்தக்கோம்பனாக இருந்தாலும் ஓர் கட்டத்தை தாண்டினால் புத்தி பேதலிப்பது இயற்கை, அதை யாராலும் மறுக்க முடியாது
என்பதற்கான முன்னய அனுபவங்கள் ஊடாக சிலதை யூகித்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
அரசியல் செய்திகளுக்கு அதீக வாசகர்களைக் கொண்ட தமிழ்த்தேசிய பத்திரிகையின் அரசியல் ஆய்வாளர்களின் கட்டுரைகளை வெளியிட வேண்டாம் என அவ்வூடகத்தினூடாக எழுத்தாளர்களை முடக்க எடுத்த சாணாக்கிய தலைவரின் முயற்சில் நஸ்டப்பட்டது அவ்வூடகமும் சாணாக்கிய அரசியல் வாதியுமே தவிர எழுத்தாளர்களோ வாசகர்ளோ அல்ல, இது நவின கணனி உலகு.
பல சர்வதிகார ஆட்சிகளை வீழ்த்தி ஆட்சியளர்களை வீட்டுக்கு அனுப்பிய அபார ஆயுதமே ஊடகம், இதனுடன் எள்ளி நகையாட முனைவது சிறுபிள்ளைத்தனமான குறு மூளைச்சாணாக்கிய சிந்தனையே.
ஓர் பிழையை சரியக செய்து விட்டு பத்திரிகை நிர்வாகம் விசுவாசமாக நடந்து கொள்ள வில்லை என உளம் குமுறுவது ஏப்ரல் முதலாம் திகதியை பறைசாட்டுகிறது..