க.கிஷாந்தன்
அட்டன் எபோட்சிலி தோட்டப்பகுதியில் 02.05.2016 அன்று இரவு இடம்பெற்ற பாரிய இடி தாக்கத்தால் மக்கள் குடியிருப்புகள் அதிர்வுக்குள்ளான நிலையில் அத்தோட்டத்தில் பாரிய மரம் ஒன்றில் இந்த இடி வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது இச்சம்பவத்தில் எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்த பொலிஸார் அவர்களின் குடியிருப்புகளுக்கு இதுவரை எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
கடந்த ஓர் இரு நாட்களாக மலையக பகுதிகளில் ஆங்காங்ககே இடிகளுடன் கூடிய மழை மாலை வேளைகளில் பெய்து வருகின்றது.
கூடுதலாக அட்டன் பிரதேசத்தில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய அதிகமான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
அவ்வப்போது மின்சார தடைகள் ஏற்பட்ட போதிலும் தொடர்ந்தும் வீடுகளுக்கான மின்சாரங்கள் உடனுக்குடன் கிடைக்க பெறுகின்றமையும், காலநிலை மாற்றத்தின் போது ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடலாம் இதனால் மக்கள் அவதானத்தோடு இருக்கும்படியும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.