நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்படாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேவைகளின் அடிப்படையில் அரசியல்வாதிகளை கைது செய்ய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு எவ்வித அவசியமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சொத்துக்களை களவாடி வரும் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் நபர்களே கைது செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை ஒன்றிரண்டு நாட்களில் செய்ய முடியாது எனவும் கால அவகாசம் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.