பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்க கழிவறை!

தங்கத்தில் பலவித அழகு ஆபணரங்கள், பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கோவில்கள் மற்றும் கோபுரங்களில் தங்க தகடுகள் பதிக்கப்படுகின்றன.

jemal-wright-bath-designs-toilets-bidets-500

அதே நேரத்தில் தங்கத்தினால் கழிவரையும் கட்டப்படுகிறது. இக்கழிவறை அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள கக்ஜென்கிம் அருங்காட்சியகத்தில் கட்டப்பட உள்ளது.

இது 18 காரட் தங்கத்தினால் உருவாக்கப்படுகிறது. இது கண்காட்சிக்காக வடிவமைக்கப்படவில்லை. பொது மக்கள் உபயோகத்திற்காக திறந்து விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கழிவறைக்குள் சென்று வந்தால் புதிய அனுபவம் கிடைக்கும் என அந்த அருங்காட்சியகத்தின் செய்தி தொடர்பாளர் ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.