டெஸ்டில் மீண்டும் டோனி விளையாட வேண்டும் : ரவிசாஸ்திரி

 

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் மகேந்திரசிங் டோனி. இரண்டு உலக கோப்பையை (2007 இருபது ஓவர், 2011 ஐம்பது ஓவர்) பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்தவர்.

34 வயதான டோனி 2007–ம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார். முதலில் 20 ஓவர் போட்டிக்கு கேப்டன் ஆனார். பின்னர் ஒருநாள் போட்டி, டெஸ்டுக்கும் அவரே இந்திய கேப்டன் பொறுப்பை பெற்றார்.

201604231335375064_MS-Dhoni-Quitting-Tests-was-Shocking-Says-Ravi-Shastri_SECVPF3 நிலைகளிலும் கேப்டனாக இருந்து இந்திய அணியை டோனி சிறப்பாக வழிநடத்தி சென்றார். 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார்.

இதனால் டெஸ்டுக்கு மட்டும் வீராட்கோலி கேப்டனாக இருக்கிறார். ஒருநாள் போட்டி, 20 ஒவர் ஆட்டத்துக்கு டோனி கேப்டனாக நீடித்து வருகிறார். தோல்வி ஏற்படும் போதெல்லாம் அவரிடம் ஓய்வு எப்போது என்ற கேள்வி எழுப்பப்படும்.

இந்த நிலையில் டோனி டெஸ்ட் அணிக்கு மறுபிரவேசம் செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், அணியின் இயக்குனருமான ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

டோனி ஒரு சாம்பியன் ஆவார். ஆடுகளத்தில் அனைத்து அம்சங்களையும் நன்கு அறிந்தவர். அவர் ஒரு முழுமையான சகாப்தம் ஆவார்.

12 ஆண்டுகளாக விளையாடும் அவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் குணத்துடன் ஆடுவார். கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் விளையாட அவர் இன்னும் தகுதியுடன் தான் இருக்கிறார். டோனி டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் அதற்கான உடல் தகுதியுடன் அவர் இன்னும் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.