இலங்கையின் மீன் ஏற்றுமதி குறித்து விதிக்கப்பட்டிருந்த தடை நாளை 21 ஆம் திகதி முதல் நீக்கிக்கொள்ளப்படும் என ஐரேப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பினை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு உறுதிசெய்துள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கையினை அடுத்த வாரமளவில் ஐரோப்பிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கும் சந்தர்ப்பத்தில் சர்வதேச சட்டதிட்டங்களை மீறுவதாக கூறியே குறித்த தடையினை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 3 வருடங்களாக விதித்திருந்தது.
மேலும், குறித்த தடையினால் கடந்த 3 வருடமாக இலங்கை மீன்களை ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்து வந்தன.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்தத் தடையினை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், இலங்கை சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான எச்சரிக்கையின் பின்னே இந்தத் தடையை விலக்கிக்கொள்வது தொடர்பாக முடிவு செய்யப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.