மின்சாரம் மற்றும் மருந்துகளுக்கு பெறுமதி சேர் வரி (வெட் வரி) விலக்களிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும், நீருக்கான 4 சதவீத வரி அதிகரிப்பை மேற்கொள்ளாது இருப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.