இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்ய ஹொங்கொங் நடவடிக்கை

SAMSUNG DIGITAL CAMERA

 

 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்வதற்கு ஹொங்கொங் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹொங்கொங்கிற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிப்போரை தண்டிக்க புதியசட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஹொங்கொங் குடிவரவு குடியகழ்வு திணைக்களப் பணிப்பாளர் வில்லியனம் புங் பாக் ஹோ தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகளிலிருந்து ஹொங்கொங்கிற்கு சட்டவிரோதமாக பிரவேசிப்போருக்கு உச்சபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 மில்லியன் ஹொங்கொங் டொலர்கள் அபராதமும்  விதிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஹொங்கொங்கிற்குள் பிரவேசிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கு உதவுவோருக்கும் ஏழு ஆண்டு கால சிறைத்தண்டனையும் 600,000 ஹொங்கொங் டொலர் அபராதமும் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது