இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி நிவித்திகல – தொலஸ்வெல தோட்ட கொலம்பகம 2ம் பிரிவு பகுதியில் பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 09.04.2016 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் அவரினால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிவித்திகல – தொலஸ்வெல தோட்ட கொலம்பகம 2ம் பிரிவில் 30 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதி நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல, பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.