லெபனான் நாட்டின் முன்னாள் தகவல் தொடர்பு மந்திரி மைக்கேல் சமஹா. சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத் தின் ஆலோசகராகவும் இருந்தார்.
இந்த நிலையில் லெபனானில் தனது அரசியல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ய சிரியா ராணுவ உதவியுடன் இங்கிருந்து வெடி பொருட்களை லெபனானுக்கு கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதை தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு 4 1/2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் அந்த தண்டனை நிறுத்தப்பட்டு கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி அரசு தரப்பில் விவாதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.