ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் மலிங்கா முதலிடம்!

imagesமும்பை இந்தியன்ஸ் வீரரான மலிங்கா ஐ.பி.எல். போட்டித் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக திகழ்கிறார். 98 ஆட்டத்தில் 143 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 13 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியதே அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும். அவருக்கு அடுத்த படியாக அமித் மிஸ்ரா 111 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 110 விக்கெட்டும் எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். 

ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசியவர் சோகைல் தன்வீர். பாகிஸ்தான் வீரரான அவர் 14 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு ஆகும். அவருக்கு அடுத்தப்படியாக கும்ப்ளே 5 ரன் கொடுத்து 5 விக்கெட்டும், இஷாந்த்சர்மா 12 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் கைப்பற்றினர்.