ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய வேலைத் திட்டங்களை வெற்றியடையச் செய்து பொருத்தமற்ற வேலைத் திட்டங்களை தோற்கடிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் முதலில் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது தான் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1956ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட வெற்றியின் 60 அண்டு பூர்த்தி நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது, அந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை விட நாடு குறித்து சிந்திப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்று அவர் இதன்போது கூறினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சுதந்திர கட்சியின் பல மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வருகைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.