இந்து சமுத்திரத்தின் வர்த்தக கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் : பிரதமர் ரணில்

1382335746China

இந்து சமுத்திரத்தின் வர்த்தக கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிஙக் சீனாவின் பெய்ஜிங்கில் வைத்து தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இலங்கையை உருவாக்குவதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக நாட்டின் நிதிக் கொள்கைகளை மேலும் சுயாதீனமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கை புதிய பாதையில் பயணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டும் தற்போது இணக்கப்பாட்டுடைய அரசியலை மேற்கொண்டு தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல் தடiவாயக நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளினதும் பிரதிநிதிகள் சீன விஜயமொன்றை மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.