சவுதி அரேபியாவிலிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊடாக பயணிக்கும் நண்பர்களுக்காக

srilankan_airlines[1]_Fotor

 

சவுதி அரேபியாவில் ஜித்தா விமான நிலையத்தில் நடக்கும் மிகவும் மோசமான ஒரு விடயம் என்னவெனில் சொந்த நாட்டிலிருந்து மிகவும் கஸ்ட்டப்பட்டு இங்கு வெளிநாடு வந்து மூன்று , நான்கு வருடங்கள் கழித்து விடுமுறையில் நாட்டுக்கு செல்லும் போது நமது நாட்டு விமானம் மூலம் சென்றால் நமது நாட்டுக்கு நமது பணம் செல்கிறது என்ற நல்லெண்ணத்தில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸில் டிக்கட் எடுத்து அவர்கள் டிக்கட்டில் குறிப்பிட்டுள்ள 40 கிலோவுக்குட்பட்ட பொருட்களை இரண்டு பெட்டிகளில் இட்டு கையில் கொண்டு செல்லக்கூடிய பெட்டியில் 06 – 07 கிலோ மாத்திரமே அனுமதிப்பார்கள் என்று அறிந்து அதனையும் அதற்கேற்றாற்போல் எடுத்து சென்றாலும் வேண்டுமேன்றே நம்மிடம் காசு பறிக்கும் நோக்கில் நம்மவர்களே செயற்படுவது மிகவும் வேதனையளிப்பதோடு இனிமேல் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊடாக பயணிப்பதில்லை என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது.

கடந்த வாரம் நண்பர் ஒருவர் விடுமுறையில் நாட்டுக்கு பயணிக்கவிருந்தார் அவருடன் நானும் ஜித்தா விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன் விமான நிலையத்திற்கு செல்லும் முன்னரே அவர்களின் சட்டதிட்டப்படி சரியாக நிறையுடைய இரண்டு பொதிகளுடனும் கையில கொண்டு செல்ல 07 கிலோவும் கொண்டு சென்றோம் அங்கு சென்று கவுண்டருக்கு செல்வதற்கு முன்னா அங்குள்ள தராசில் இரண்டு பெட்டிகளையும் நிறுத்து பார்த்தோம் இடை 41 கிலோ இருந்தது என்றாலும் 01 கிலோ தானே பரவாயில்லை விடுவார்கள் என எண்ணி கவுண்டரில் சென்று நிறுத்த போது 04 கிலோ அதிகமாகவுள்ளது அதற்கு மேலதிக கொடுப்பணவு செலுத்தவேண்டும் என அங்குள்ள பெரும்பான்மை இன மேற்பார்வையாளர் கூறினார். அல்லது உங்கள் நிறையை குறைத்து வாருங்கள் என்றார். நாம் நிறையை குறைப்பதாக கூறி மீண்டும் வெளியில் சென்று பெட்டியிலிருந்த 04 கிலோ பொருட்களை வெளியிலெடுத்து மீண்டும் அங்கு சென்று நிறுக்கும் போது  மீண்டும் 42 கிலோ கவுண்டறிலுள்ள டிஜிடல் நிறுவையில் காட்டியதும் நாம் மிகவும் ஆச்சரியமடைந்தோம்.

வெளியில் சென்று நிறுத்தோம் 04 கிலோ வெளியில் எடுத்தோம் என கூறியும் அங்குள்ளவர்கள் அதனை காதில் வாங்குவதாக இல்லை.

அங்குள்ள மேற்பார்வையாளர் மற்றய கவுண்டருக்கு செல்லும் நேரத்தில் கவுண்டறிலுள்ளவர் கூறினார் மேலதிகமாகவுள்ளவற்றுக்கு பணம் செலுத்தினால் கிலோவுக்கு 150றியால் செலுத்த வேண்டும் எனக்கு 200 றியால் தந்தால் போட்டு விடுவேன் காசு இங்கு தரவேண்டாம் உள்ளே சென்ற பேிறகு வோடிங் எடுக்க நான் வருவேன் என்னிடம் தரவேண்டும் சரியென்றால் பொருட்கள் போகும் இல்லையென்றால் மீண்டும் 04கிலோ குறைக்க வேண்டும் என அதிகாரமாக கேட்டார். வேறு வழியில்லாமல் நண்பரும் அப்படியே செய்தார்.

இந்த விடயம் பற்றி ஜித்தா விமானநிலையத்தில் பனியாற்றும் இலங்கையர் ஒருவரிடம் வினவியபோது இது வேண்டுமென்றே இங்குள்ள மேற்பார்வையாளர் உட்பட அனைவரின் ஒத்துழைப்புடன் நடை பெறுகிறது என கூறினார்.

நாம் 04 கிலோ பொருட்களை வெளியில் எடுத்த பிறகும் அது எப்படி மீண்டும் 40கிலோவுக்கு கூடுதலான நிறையை காட்டுகிறது என வினவிய போது அவர் கூறினார் கவுன்டரில் இருப்பவரின் காலுக்கடியில் ஒரு இயந்திரம் இருப்பதாகவும் அதனை அவர்கள் அழுத்துவதனால் அப்படி நிறை அதிகமாக காட்டுவதாகவும் கூறினார்.

எனது நண்பருக்கு மட்டும் இந்த நிலை என நான் எண்ணியிருந்தேன் பிறகு நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் போகும் 90வீதமானவர்களிடம் இப்படி ஏமாற்றி காசு பறிப்பது தெரியவந்ததாக கூறினார்.

சவுதி அரேபியன் எயர்லைன்ஸினூடாக செல்லும் பயணிகளுக்கு 45 கிலோ மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சில நேரங்களில் 05 கிலோ அதிகமாக இருந்தாலும் சவுதி அரேபியன் எயர்லைன்ஸ் ஊளியர்கள் அரேபியர்கள் மிகவும் தாராள மனதோடு இந்த முறை சரி இனிமேல் இப்படி கொண்டுவர வேண்டாம் என புண்ணகையுடன் கூறுகிறார்கள்.

நம் நாட்டு விமானம் என நாம் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊடாக பயணிக்க நிணைக்கும் போது இப்படி மோசமான நடவடிக்கைகளைில் அங்குள்ளோர் ஈடுபட்டு செத்தாலும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் போக வேண்டாம் என கூறும் அளவுக்கு நடந்து கொள்கின்றனர்.

எனவே சவுதியிலிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸில் பயணம் செய்யவுள்ளோர் மிகவும் கவணமாக நடந்து கொள்ளுங்கள். முடிந்தவரை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸில் பயணிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.

முபாரக்