ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மோதல்

க.கிஷாந்தன்

logo_gold2_Fotor

 

ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் தமிழ் மாணவர்கள் ஏழுபேர் படுங்காயங்களுக்குள்ளாகி, பதுளை அரசினர் மருத்துவமனையில் எட்டாம் இலக்கவாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வவுனியா, மட்டக்களப்பு, மன்னார், யாழ்பாணம், ஆகியபகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே, காயங்களுக்குள்ளாகியிருப்பவர்களாவர்.

இப்பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாகவிருந்தே, தமிழ், சிங்கள மாணவர்களிடையே கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளன. இம்முரண்பாடுகள் மோதலாக மாறி, சிங்கள மாணவர்களினால், தமிழ் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த 30ந்திகதி இரவு 10 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட சிங்கள மாணவர்கள் ஒன்றினைந்து, இரண்டாம் வருட தமிழ் மாணவர்கள் 4 பேரும், மூன்றாம் வருட தமிழ் மாணவர்கள் இருவரும், இறுதியாண்டு தமிழ் மாணவர் ஒரு வருமாக ஏழு பேரை பொல்லுகளினால் தாக்கியுள்ளனர். இதனால் கடும் காயங்களுக்குள்ளான ஏழுபேரும், பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளைப் பொலிஸாருக்கு, மேற்படிசம்பவம் குறித்து புகார் செய்யப்பட்ட போதிலும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

மேற்படிசம்பவம் குறித்து, பொலிஸ் விசேட குழுவொன்று தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பலர் மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரனைக்குற்படுத்தப்பட்டுள்ளனர்.