35 வருட கலை,இலக்கியப் பணியில் மாத்தளைக் கமால்

பி.எம்.எம்.ஏ.காதர்

 
நம் நாட்டின் பிரபல கவிஞரும்.எழுத்தாளரும்,பாடகருமான மாத்தளைக்கமால் தனது கலை இலக்கியப்பணியில் இவ்வருடம்(2016) ஏப்ரல் மாதத்துடன் 35 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளார். பாடல்களை இயற்றி தனது கனீர் என்ற குரலால் பாடி நம்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வரும் இவர் சுயமான முயற்சியுடன் ரப்பான் இசை மூலம் அவர் இயற்றிய சமூக எழுச்சிப் பாடல்களை அவரே பாடி நல்ல பாடகர் என்ற சமூக அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார்.

2-MATHALI KAMAL-30-06-2016_Fotor
1962ஆம் ஆண்டு மாத்தளையில் ஹஸன் மீராமுகைதீன் சித்தி ஜூவைரியா தம்பதிக்குப் பிறந்தவர் முஹம்மட் கமால்தீன் இவர் 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிரேஷ்ட அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் நடாத்திய பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் அறிமுகமான போது பி.எச்.அப்துல் ஹமீட் இவரை மாத்தளைக்கமால் என அழைத்ததில் இருந்து இன்று வரை மாத்தளைக்கமால் என்றே இவர் அழைக்கப்படுகின்றார்.
1981 தொடக்கம் 1997வரை நடைபெற்ற பாட்டுக்குப் பாட்டு நிகழ்சியில் 14 போட்டிகளில் 10 Nhட்டிகளில் இவர் முதற்; பரிசுகளைப் பெற்றுள்ளார்.இப்போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியிலும் இவர் முதற்பரிசைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்;சிக் கீதத்தைப் பாடி பெருமையும் இவரையே சாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத் தலைவர் கவிஞர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் இயற்றிய இந்த கட்சிக் கீதம் 1992ஆண்டு கொழும்பில் மாத்தளைக் கமாலின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இன்று வரை இப்பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

 
1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிஸ் கட்;சியின் புதிய வெளிச்சங்கள் வெளியீட்டு வழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்;சிக் கீதத்தைப் பாடி மாத்தளைக் கமால் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

 
கவிஞரும்.எழுத்தாளரும்,பாடகருமான மாத்தளைக் கமால் இதுவரை 114 பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். இவர் இயற்றிப் பாடியுள்ள பாடல்களின் இறுவெட்டு விரைவில் கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.இந்த இறுவெட்டுக்கு வாந சநயட ளரிநச ளவயச எனப்பெயரிடப்பட்டுள்ளது தமிழ் மொழியிலான பல பாடல்களுடன் சிங்கள,ஆங்கில மற்றும் உருது மொழியிலான பாடல்களும் இந்த இறுவெட்டில் இடம் பெற்றுள்ளது.
முன்பு இவர் வெளிட்ட இறுவெட்டுக்கள் சமூகத்தில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது கடந்த 15ஆண்டுகளில் 50பது ஆயிரத்திற்கும் அதிகமான இறுவெட்டுப் பிரதிகள் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
இவரது பாடல்களில் இன்றைய சமகாலத்தில் உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கிவரும் நெருக்கடிகள் மற்றும் அவலங்கள் மற்றும் படு கொலைகள் தொடர்பிலும் இவரது பாடல்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது இது வரை இலங்கையில் உள்ள இருநூற்று மேற்பட்ட கல்வி நிலையங்களுக்குச் சென்று சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி பாடல்களையும் பாடியுள்ளார்.இன்று வரை இவரது குரல் மாறாது பாடிக்கொண்டிருக்கும் இவர் இன்னும் சமூக மேம்பாட்டுக்கான பாடல் களைப் பாட வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.