அஷ்ரப் ஏ சமத் , எம்.ஐ.முபாரக் , பழுலுல்லாஹ் பர்ஹான்
ஏறாவூர் ஐயங்கேணி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலை மற்றும் கைத்தறி நிலையம் இன்று (1) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர் .
மேலும் மாகாண அமைச்சர்களான ஏ.எல்.எம். நசீர், கே. துரைராஜசிங்கம், ஆரியவதி கலபதி, இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான அலி ஸாஹிர் மௌலானா, எம்.ஐ. எம் .மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அரசாங்க அதிகாரிகள் சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கில் இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கும், பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் ஏகமான ஒரு தீர்வாக இந்தக் கைத்தொழில்பேட்டை அமையப் போகிறது. இவ் ஆடைத் தொழிற்சாலையை ஹமீடியாஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.