மகிந்த குடும்பத்தினரிற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி உறுதி !

Mahinda-Maithri-1

 

முன்னாள் ஜனாதிபதி குடும்பத்தினரிற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு  அதிகாரிகளிற்கு ஆலோசனை  வழங்குவதாக ஜனாதிபதி சிறிசேன அமைச்சரவைக்கு உறுதியளித்துள்ளார்.
இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது. இலங்கையின் நிதிமற்றும் பொருளாதார நிலை குறித்த உண்மைகளை அறிந்துள்ள அமைச்சர்கள் இலங்கை பொருளாதாரத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
சிலர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விசாரணைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஆணைக்குழுக்களை அமைக்குமாறு கோரியுள்ளனர்; எனினும் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ள விசாரணைகளில் இதுவுமொன்றாக மாறிவிடுமோ என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.
கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தொடரின் போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது. அமைச்சர் சம்;பிக்க ரணவக்க இது குறித்து சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி குடும்பத்திற்கு எதிரான பல  விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் கருத்து தெரிவித்தார். இந்தவிடயம் குறித்து கவனம் எடுப்பதாக  ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன உறுதியளித்தார்.