நேபாள நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தில் பிளவுகளும், ஓட்டைகளும் அதிகரித்துள்ளன!

1e363429-b850-49ce-87e5-b7399043d972_S_secvpfநேபாள தலைநகர் காத்மாண்டு அருகே உள்ள கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25-4-2015-ம் அன்று  ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் நாட்டையே புரட்டிப்போட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை சந்தித்துள்ள நேபாளம், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது. 

இந்த நிலநடுக்கத்துக்கு, நேபாளத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்ததுடன், 16,390 பேர் வரை காயமடைந்தனர். பெரும் பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்தது என முன்னர் கூறப்பட்டது.

தற்போது, எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள பகுதியில் பனிமலை ஏறும் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக எவரெஸ்ட் சிகரத்தை ஒட்டிய பகுதிகளின் பல இடங்களில் பிளவுகளும், ஓட்டைகளும் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.