ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு தோன்றியுள்ளமையை அடுத்து சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, இது தொடர்பில் கருத்துரைக்கையில்,
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோர் கட்சியின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இது இடம்பெறாவிட்டால் கட்சியின் உறுப்பினர்கள் விலகிச் செல்வதை தடுக்க முடியாது போய் விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, முன்னாள் பிரதியமைச்சர்கள் மில்ரோய் பெர்ணான்டோ, சரண குணவர்த்தன ஆகியோர் இதற்கு சமமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை தாம் விரைவில் மரணம் எய்தப் போகின்ற போதும் கட்சி மரணம் எய்தாது என்று முன்னாள் பிரதமர் டி எம் ஜெயரட்ன அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.