நாட்டில் தற்போது நிலவும் கடும் வரட்சி நிலை காரணமாக மனிதர்கள், உயிரினங்கள், மரஞ்செடிகொடிகள் எதிர் கொள்ளும் அபாய நிலைமைகளில் இருந்து பாதுகாப்புப் பெரும் பொருட்டு மழை வேண்டிய விஷேட தொழுகை ஒன்றினை பெற்ற மஸ்ஜிதுகள் சம்மேளனம், புதுக்கடை மஸ்ஜிதுகள் சம்மேளனம் மற்றும் மத்திய கொழும்பு ஜமியதுல் உலமா சபைக் கிளை என்பன இணைந்து கொழும்பு-12. குணசிங்கபுரத்தில் உள்ள குணசிங்க விளையாட்டு மைதானத்தில் இன்று (27) காலை ஏற்பாடு செய்திருந்தது.
மழை வேண்டிய இஸ்திஸ்காயி எனும் மழை தேடித் தொழும் தொழுகையை மௌலவி சல்மான் (ஹாசிமி) நடாத்தியதுடன் குத்பா பயானை மௌலவி ஹஸன் பரீத் (பின்னூரி) நிகழ்த்தியதுடன் விஷேட துஆப் பிரார்த்தனையும் அவர் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் குணசிங்கபுர கில்வீதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளீன், மார்க்க அறிஞர்கள், மத்தரஸாக்களின் மாணவர்கள் எனப் பெருந்திரலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.