பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளம் 40 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக வெல்லாவ பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் 20 வீத சம்பள உயர்வும் அடுத்த ஆண்டில் 20 வீத சம்பள உயர்வும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
பொலிஸ் நிலையங்கள் கட்டடங்கள் அமைப்பதனால் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என கருதவில்லை.
குறிப்பாக பொலிஸ் சட்டம் பற்றி நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். இது மிகவும் பழைய ஓர் சட்டமாகும்.
பொலிஸ் சேவை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு குறித்து கொள்கைகள் வகுக்கப்பட்டு அவை அமுல்படுத்தப்பட வேண்டும்.
40 வீத சம்பள அதிகரிப்பிற்கு திறைசேரியில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக சம்பள உயர்வினை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.